கொசுவை ஊதித்தள்ளுவது போல டிராக்டரை இடித்துவிட்டு சிட்டாக பறந்த தனியார் பேருந்து

தஞ்சை மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Share this Video

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேல் உளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் நேற்று மதியம் மேல் உளூர் அருகில் பட்டுக்கோட்டை - தஞ்சை பிரதான சாலையில் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். அப்போது தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து டிராக்டரை முந்தும் போது விபத்துக்குள்ளானது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த விபத்தில் டிராக்டர் சுக்குநூறாக உடைந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்ததில் காரும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் டிராக்டர் ஒட்டி வந்த அசோக்குமார் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் தனியார் பேருந்தில் பயணம் செய்த சில பயணிகளும் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Video