உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை சுற்றி உள்ள அகழியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை மாநகராட்சி அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

Share this Video

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாட்டுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவில் சோழன் சிலை பின்புறம் அகழியில் இன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் தஞ்சை மாநகராட்சி பணியாளர்கள் நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

Related Video