தஞ்சையில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயனின் உருவ பொம்மைகள் எரிப்பு; தஞ்சையில் பரபரப்பு

காஷ்மீரி முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். என வலியுறுத்தி கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் உருவ பொம்மைகளை விடுதலை தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

First Published Feb 22, 2024, 8:28 PM IST | Last Updated Feb 22, 2024, 8:28 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி உள்ள அமரன் திரைப்படத்தில் காஷ்மீர் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை தமிழ்புலிகள் கட்சியினர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர்.

உருவப் பொம்மையை எரிக்க விடாமல் தடுக்க காவல் துறையினர் தீயணைப்பு வாகனம், தீ அணைப்பான். வாளியில் தண்ணீர் என தயார் நிலையில் வைத்து இருந்தாலும் காவல் துறையினர் கண்களில் மண்ணை தூவி போராட்டக்காரர்கள் கமல்ஹாசன். சிவகார்த்திகேயன் உருவப்பொம்மைகளை எரித்தனர்.

இதனை அடுத்து தடையை மீறி  உருவ பொம்மை எரித்த விடுதலை தமிழ் புலிகள் கட்சியினரை காவல் துறையினர் இழுத்து சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் நடந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Video Top Stories