தஞ்சை குடியிருப்பு வாசிகளே உஷார்; வீட்டில் இருந்த தாய், மகளிடம் குல்லா கொள்ளையர்கள் செயின் பறிப்பு

தஞ்சையில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மங்கி குல்லா கொள்ளையர்கள் தாய், மகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Nov 29, 2023, 10:49 AM IST | Last Updated Nov 29, 2023, 10:55 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கீழவஸ்தா சாவடி நாகா நகரில் பன்னீர்செல்வம், இந்திராணி தம்பதியினர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு இவர்களது வீட்டிற்குள் மங்கி குல்லாவால் முகத்தை மூடி மேலாடை அணியாமல் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் தனியாக இருந்த பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த நகையை பறித்து சென்றனர்.

கொள்ளை சம்பவத்தின் போது கதவில் பதிந்து இருந்த தங்கள் கைரேகைகளை துணியால் துடைத்து விட்டு தப்பி செல்லும் காட்சிகள் அனைத்தும் அந்த வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி வீடியோ வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories