Asianet News TamilAsianet News Tamil

தனியார் பள்ளியில் நடைபெற்ற கோலப்போட்டி; பட்டுப்புடவைகளை பரிசாக அள்ளிச்சென்ற வெற்றியாளர்கள்

கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் மார்கழி பூக்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கோலப்போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மார்கழி பூக்கள் என்னும் தலைப்பில் வண்ண கோலம் போட்டி நடைபெற்றது. பள்ளி முதல்வர் அம்பிகாபதி வரவேற்றார். கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். கோலமானது மனதிற்கு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. புள்ளிக்கோலம், ரங்கோலி கோலம் என பல வகைகள் உண்டு. 

நாம் மனதில் நினைப்பதையும் சொல்ல விரும்புவதையும் கோலங்கள் மூலம் வெளிப்படுத்தலாம். அப்படிப்பட்ட கோலங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இக்கோல போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டியில் சிறப்பாக வரையப்பட்ட முதல் 10 கோலங்களுக்கு பட்டுப் புடவை பரிசு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Video Top Stories