வேற்றுமையில் ஒற்றுமையை ரங்கோலி மூலம் வெளிப்படுத்திய அரசுப்பள்ளி மாணவிகள்; குடியரசு தினத்தை முன்னிட்டு அசத்தல்
குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சை அருகே நடத்தப்பட்ட ரங்கோலி கோலப்போட்டியில் திரளான மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்திய நாட்டின் குடியரசு தின விழாவை முன்னிட்டு தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை, ஒற்றுமையே பலம், நிறத்தால் நிலத்தால் பாகுபாடு இல்லை என்ற தலைப்பில் ரங்கோலி வண்ணக்கோலம் இட்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் பள்ளி மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.