கர்நாடகா அரசை கண்டித்து தஞ்சையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டர்களுடன் ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தஞ்சையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்ட டிராக்டர் வாகனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

First Published Oct 21, 2023, 10:49 PM IST | Last Updated Oct 21, 2023, 10:49 PM IST

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூரில் அனைத்து விவசாய அமைப்புகள் சார்பில் நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்திற்கு போதிய நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும், பந்தநல்லூர் பகுதிக்கு குறைந்த மின்னழுத்தம் வழங்குவதால் விவசாய மோட்டார் இயங்காமல் உள்ளதாகவும் உயர் மின்னழுத்த வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், காலநிலை மாற்றத்தால் கருகி வரும் நெற்பயிருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் எனவும், கோயில் நிலங்களில் உள்ள வீடுகளுக்கும் விவசாய பம்பு செட்டுகளுக்கும் மின் இணைப்பிற்காக கோயில் நிர்வாகம் தடை இன்றி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட டிராக்டர் வாகனங்களைக் கொண்டு 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து பந்தநல்லூர் கடை வீதியில் கண்டன கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோயில் இடையான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது‌‌.