Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்

தஞ்சையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு, தனியார் பேருந்தை முந்திச் சென்ற தனியார் பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

First Published Jul 5, 2024, 1:33 PM IST | Last Updated Jul 5, 2024, 1:33 PM IST

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து திருவலஞ்சுழி என்ற பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை‌ அதிவேகமாக முந்த முயன்று விபத்து ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்து அச்சமடைந்தனர். 

கொலையில் முடிந்த குழாய் அடி சண்டை; போலீசின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

தகவல் அறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு)ஜாபர் சித்திக் போக்குவரத்து காவலர்கள் மூலம் விபத்தை ஏற்படுத்த முயன்ற தனியார் பேருந்தை பறிமுதல் செய்ததோடு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கைது செய்தனர். தனியார் பேருந்துகள் அதிக சத்தம் தரக்கூடிய ஹாரன் வைத்துக்கொண்டு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் செல்வது வாடிக்கையாக உள்ளது. 

போக்குவரத்து துறை அதிகாரிகள் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இரண்டு பேருந்துகளும் மோதும் அளவிற்கு ஓவர் டெக் செய்யும்  காட்சிகள்தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

Video Top Stories