Asianet News TamilAsianet News Tamil

Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சரஸ்வதி தனியார் பேருந்தில் சில்லறை இல்லாத காரணத்தினால் பாதியில் இறக்கி தள்ளி விடப்பட்ட  கர்ப்பிணி பெண்.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி புறப்பட்ட சரஸ்வதி என்ற தனியார் பேருந்தில் கர்ப்பிணி ஒருவர் ராஜகிரி செல்வதற்காக ஏறியுள்ளார். பேருந்து பாதி தூரம் சென்றவுடன் நடத்துநர் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் சில்லறை இல்லை என்று நடத்துநர் தெரிவிக்கவே நடத்துநருக்கும், பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பேருந்து பசுபதி கோவில் பகுதியில் வந்து கொண்டிருந்த நிலையில், பேருந்தை நிறுத்திய நடத்துநர், அப்பெண்ணை பாதி வழியில் வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video Top Stories