ஆட்டு குட்டிகளுக்கு வளர்ப்பு தாயாக இருக்கும் நாய்; வியந்து பார்க்கும் பொதுமக்கள்

கும்பகோணத்தில் ஆட்டி குட்டிகளுக்கு பாலூட்டும் நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கீரனூரில் வசித்து வருபவர் வீரமணி. இவர் நாய், ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் இரண்டு மாதத்திற்கு முன் நாய் 5 குட்டிகள் ஈன்ற நிலையில், கடந்த மாதம் இவர் வளர்த்து வந்த ஆடு 3 குட்டிகளை ஈன்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சில நாட்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆடு இறந்தது.

மூன்று ஆட்டுக்குட்டிகளில் இரண்டு குட்டிகள் தட்டில் வைக்கப்படும் பாலினை குடித்து விடுகின்றன. ஆனால் ஒரு குட்டி மட்டும் தட்டில் வைக்கும் பாலினை குடிக்காமல் வீரமணி வளர்க்கும் நாயிடம் பாலை குடித்து வருகிறது. நாயும் தாராளமாக ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்து வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Video