Asianet News TamilAsianet News Tamil

கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ நாடியம்மன் திருக்கோயிலில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது 20க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களுக்கு கோலாட்டம் ஆடி அசத்தினர்.

தஞ்சை மாவட்டம்,  பட்டுக்கோட்டை அடுத்த நடுவிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ நாடியம்மன் திருக்கோவிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை பூர்த்தி விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. மண்டல பூஜை பூர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ நாடியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற வள்ளி கும்மியாட்டம் போல் ஒட்டு மொத்த டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக கோயில் வளாகத்தில் அதே நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் சீருடை போல் சேலை அணிந்து சுமார் 2 மணி நேரம் இடைவிடாது 20 திரையிசைப் பாடல்களுக்கு கோலாட்டம் ஆடி அசத்தினர். இது பார்ப்பவர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Video Top Stories