தஞ்சையில் ஆடு மேய்க்கச் சென்ற 2 சிறுமிகள் புதை மணலில் சிக்கி பரதாமபாக பலி
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி குடமுருட்டி ஆற்றில் புதை மணலில் சிக்கி ஆடு மேய்க்க சென்ற இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம் ஒன்பத்துவேலி காமராஜர் காலணியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவரின் மகள் பிரத்திகாவும் (வயது 14). சௌந்தராஜன் என்பவரின் மகள் குணசுந்தரியும் (வயது 16) நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக குடமுருட்டி ஆற்றுக்கு அழைத்து சென்று உள்ளனர். ஆடுகள் கரையோரம் மேய்து கொண்டு இருந்த நிலையில் சிறுமிகள் இரண்டு பேரும் குடமுருட்டி ஆற்றில் விளையாடி கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக புதை மணலில் சிக்கி மூழ்கி உள்ளனர். ஆடு மேய்க்க சென்ற சிறுமிகள் நீண்ட நோமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் குடமுருட்டி ஆற்றில் சென்று தேடியபோது சிறுமிகள் இரண்டுபேரும் புதை மணலில் சிக்கி உயிர் இழந்து இருப்பது தெரியவந்தது. சிறுமிகளின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே தெருவை சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.