எங்கள் கட்சியில் சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை - கார்த்திக் சிதம்பரம்

எங்கள் கட்சிக்குள் எந்த சண்டையும், சச்சரவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் தெரிவித்துள்ளார்.

First Published Feb 17, 2024, 3:24 PM IST | Last Updated Feb 17, 2024, 3:24 PM IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு அட்டைகளை வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம், சிவகங்கை மாவட்ட  காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை குறித்த கேள்விக்கு, எங்கள் கட்சிக்குள் எந்த சண்டையும், சச்சரவும் இல்லை. அகில இந்திய பார்வையாளர் வந்தபோது இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Video Top Stories