இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து பள்ளத்தில் சரிந்து விபத்து; நடத்துநர் பலி, 15 பேர் காயம்

காரைக்குடி அருகே வேகமாக வந்த தனியார் பேருந்து எதிரில் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் நடத்துநர் உயிரிழந்தார், 15க்கும் அதிகமான பயணிகள் காமடைந்தனர்.

Share this Video

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் இருந்து காரைக்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று அதிகவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முன்று ஓட்டுநர் பேருந்தை வேகமாக திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் நடத்துநர் சிவா (வயது 22) பேருந்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 15க்கும் அதிகமான பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video