Asianet News TamilAsianet News Tamil

மருதுபாண்டியர் சிலை வைக்க மோதல்.. போலீஸ் தடியடியால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்த கூட்டம்..! பரபரப்பு வீடியோ..

மருதுபாண்டியர் குருபூஜை விழாவுக்குச் சென்றவர்கள் சிவகங்கை தெப்பக்குளம் அருகே மருதுபாண்டியர் சிலை ஒன்றை வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது 

First Published Oct 28, 2019, 12:53 PM IST | Last Updated Oct 28, 2019, 12:53 PM IST

நேற்று சிவகங்கை காளையார் கோவிலில் நடைபெறும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு வாகனங்கள் வந்த சிலர் சிவகங்கை தெப்பக்குளம் அருகே மருதுபாண்டியர் சிலை ஒன்றை வைக்க முயன்றனர். இதனை போலீசார் தடுத்தபோது போலீசாருக்கும் மருதுபாண்டியர் வழிபாட்டுக்கு வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

 நீண்டநேரம் சிலை வைக்க அனுமதிக்காததால் வாக்குவாதம் முற்றி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தும் கலையாததால் போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தி கலைத்தனர்

Video Top Stories