அடிக்குற வெயிலுக்கு எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலயே; குழாயை திறந்து தாமாக தண்ணீர் அருந்தும் காளை

சிவகங்கையில் கடுமையான வெயிலால் காளைமாடு ஒன்று  அங்கிருந்த தண்ணீர் பைப்புகளை வாயால் திறந்து தண்ணீர் குடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கடுமையான வெயிலால் நின்று கொண்டிருந்த காளை மாடு அங்கிருந்த குடிநீர் குழாயில் சொட்டு சொட்டாக வந்த தண்ணீரை முதலில் குடித்தது. ஆனால் தாகம் அடங்காததால் முழுமையாக வாயால் குழாயை முழுமையாக திறந்து தண்ணீர் குடிக்கத் தொடங்கியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற மாணவர் ஒருவர், மாடு சிரமப்பட்டு தண்ணீர் குடிப்பதை பார்த்து மாடு முழுமையாக தண்ணீர் குடிப்பதற்காக தனது கைகளை வைத்து தண்ணீரை காளைமாடுக்கு அருந்த செய்தார்.

Related Video