சிவகங்கை: குஷ்புவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்த முயன்ற திமுகவினர்.. அலேக்காக தூக்கிய போலீஸ்

குஷ்புவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்த விடாமல் அலேக்காக தூக்கி சென்றார் காவல் உதவி ஆய்வாளர்.

Share this Video

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து பாஜகவின் குஷ்பு அது பிச்சை காசு என்று அநாகரிகமாய் பேசியதை கண்டித்து மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது குஷ்புவின் உருவ பொம்மையை தீயிட்டு எரிக்க முயன்றனர்.

அப்போது நகர காவல்துறை உதவி ஆய்வாளர் குஷ்புவின் உருவ பொம்மையை அலேக்காக தூக்கி சென்று காவல்துறை வாகனத்தில் பத்திரமாக வைத்து பாதுகாத்தார். இதனால் திமுக மகளிர் அணியினர் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் குஷ்புவின் புகைப்படங்களை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தினர் உடனடியாக காவல்துறை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

Related Video