VIDEO

சிவகங்கை அருகே சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
 

Share this Video

சிவகங்கை அருகே சோழபுரம் பகுதிகளில் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து வெளிமாநில மதுபான விற்பனை செய்து வருவதாக சிவகங்கை நகர் போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதனடிப்படையில் அந்த பகுதிகளில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சோழபுரம் மேலத்தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.16000. இதுதொடர்பாக விசாரணை செய்த போலீசார், மதுபானங்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த கருணாகரன் மற்றும் முருகன் என்ற முகமது யாசின் இருவரையும் கைது செய்தனர்.

Related Video