திரையரங்க உணவகத்தில் கூலாக பப்ஸ் சாப்பிட்ட பூனை; ஷாக்கான ரசிகர்கள்: லாக் செய்த அதிகாரிகள்

காரைக்குடியில் பிரபல திரையரங்கில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், திரையரங்கத்தில் செயல்படும் உணவகத்திற்கு சீல் வைத்துச் சென்றனர்.

Share this Video

சிவகங்கை மாவட்டம் மகர்நோன்பு திடல் அருகே இயங்கி வருகிறது பிரபல (சத்தியன்)திரையரங்கம். இத்த திரையரங்கத்தில் நேற்று காலை காட்சியின் போது அங்குள்ள உணவகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்ஸை தட்டோடு பூனை சாப்பிட்டுள்ளது. இதனை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட இக்காட்சி வைரலாக பரவி வருகிறது. 

தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்கில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேக், பப்ஸ், சமோசா, கூல்டிரிங்ஸ், பாப்கான் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதில் பல உணவுப் பொருட்கள் காலாவதியாகி இருந்ததை உறுதி செய்து அதனை பறிமுதல் செய்து உணவகத்திற்கு சீல் வைத்தனர்.

Related Video