Asianet News TamilAsianet News Tamil

Watch : விரைவில் தமிழகத்தில் தாமரை ஆட்சி! - காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சூளுரை!

வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தாமரை ஆட்சிதான் மலரும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காரைக்குடியில் சூளுரைத்துள்ளார்.

First Published Sep 23, 2022, 12:03 PM IST | Last Updated Sep 23, 2022, 12:03 PM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டடா பேசும் போது, தமிழ்நாடு ஒரு புண்ணிய பூமி என்றும், பல போராட்ப வீரர்களை தந்த நாடு தமிழ்நாடு என புகழாரம் சூட்டினார்.

தமிழக கலாச்சாரம் புனிதமானது, விஞ்ஞானமும் கலையும் கொட்டி கிடக்கிறது என பாராட்டினார். அரசின் விவசாயத்துறை பட்ஜெட்டில் 2014 ல் 27 ஆயிரம் கோடியாக இருந்தது தற்போது 1 இலட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்த நட்டா, உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையிலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளததாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி கோடி கோடியாக கொட்டி கொடுக்கிறார் என்றும் கூறினார். வரும் காலத்தில் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்றும் அவர் சூளுரைத்தார்.

Video Top Stories