Watch : ஊழல் பட்டியல் வெளியாவதற்கு முன், தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்! - ஹெச் ராஜா ஆருடம்!

பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14 ந்தேதி ஊழல் பட்டியல் வெளியியிடுவதற்கு முன்னரே தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். ஆளும் கட்சியில் பல ஷிண்டேக்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
 

Share this Video

சிவகங்கையில் தனியார் திருமண மண்டபத்தில் பாஜகவின் கிளைத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் ஹெச் ராஜா அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஏப்ரல் மாதம் 14 ந்தேதி ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னரே தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். மேலும் ஆளும் கட்சியிலிருந்து பல ஷிண்டேக்கள் வெளி வருவார்கள் என்றார்.

மேலும் மக்களால் மறந்து போனவர்கள் தங்களை மீண்டும் இருப்பதாக காட்டிக்கொள்ள சமூக நீதி கூட்டமைப்பு ஏற்படுத்தி குட்டிக்கரணம் அடித்து பார்ப்பதாகவும், ஆனால் உண்மையான சமூக நீதியை பிரதமர் மோடி அவர்கள் தான் செயல்படுத்தி வருகிறார் என்றும் ஹெச் ராஜா தெரிவித்தார்.

Related Video