Watch : தன்னாட்சி அதிகாரம் பெற்ற துறைகள் அனைத்தும் மோடியின் கைகளில் உள்ளது! - சீமான் விளாசல்!

ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி கட்சியை விமர்சிப்பது எல்லாம் ஒரு வித அரசியல் விளையாட்டு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 

First Published Apr 17, 2023, 11:08 AM IST | Last Updated Apr 17, 2023, 11:08 AM IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் காதணி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இபிஎஸ் மற்றும் அண்ணாமலையை முதிர்ச்சி இல்லாத தலைவர் என்று கூறியது பற்றி கேட்டபோது? தலைவர் என்றால், முதிர்ச்சியடைந்தர் அற்றவர் அப்படி ஒன்றும் இல்லை ஒரு கட்சி அவரை மாநில தலைவராக நியமித்திருக்கும் போது, அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும் வயதில் சிறியவர்கள், பெரியவர்கள் அப்படிலாம் பாக்க கூடாது என்றார்.

மேலும், கூட்டணியில் இருந்து கொண்டு ஒரு கட்சியை விமர்சிப்பது எல்லாம் இது ஒரு அரசியல் விளையாட்டு என குற்றம்சாட்டினார். திமுக ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை அதிமுக ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். இது அதிமுக தலைவர்களை புனிதரா கட்டமைக்கர செயல் என்றும், இந்த அணுகுமுறை சரியில்லை எனவும் தெரிவித்தார்.

பாஜக அரசு மோடியின் அதிகாரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள் என குற்றம்சாட்டினார். தன்னாட்சி அதிகாரம் பெற்ற சிபிஐ, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, நீதிமன்றம் இதெல்லாம் பிரதமர் மோடியின் 5 விரல்களில் உள்ளதாக குற்றம்சாட்டினார். அவர் காட்டும் நபர்களை மீது நவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீமான் தெரிவித்தார்