உன் கடையால தான்டா எங்க பொண்ணு ஓடி போச்சி; மாற்று திறனாளியின் டீக்கடையை சூறையாடிய மர்ம நபர்கள்

மானாமதுரையில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவாளுடன் டீக்கடையை சூறையாடிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

First Published Dec 9, 2023, 8:52 AM IST | Last Updated Dec 9, 2023, 8:52 AM IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட்டில் தவழும் மாற்றுத்திறனாளி புஷ்பராஜ் டீக்கடையை நடத்தி வருகிறார். தனது உறுவினரான இளைஞரை டீக்கடையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து  திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டாரின் உறவினர்கள் 4 பேர் டீக்கடையினை அரிவாளுடன் வந்து தாக்கி கடையை சூறையாடி உள்ளனர். 

இதில் ஒருவர் காயமடைந்த நிலையில்,  கடையில் நின்றிருந்தவர்கள் அலறியடித்து சிதறி ஓடினர். இச்சம்பவம் குறித்து தவழும் மாற்றுத்திறனாளி புஷ்பராஜ், 20க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுடன் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அரிவாளுடன் டீக்கடையினை சூரையாடிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Video Top Stories