Asianet News TamilAsianet News Tamil

அடேங்கப்பா.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை ஒரு கோடியே 35 லட்சத்தி 11 ஆயிரத்து 800 ரூபாய் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

First Published May 31, 2024, 8:46 AM IST | Last Updated May 31, 2024, 8:46 AM IST

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் மே மாத பக்தர்களால் பெறப்பட்ட காணிக்கைகளை உண்டியல் திறந்த என்னும் பணி நேற்று நடைபெற்றது. ராமநாத சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் உப கோவில், ராமர் தீர்த்தம் லக்ஷ்மண தீர்த்தம் சீதா தீர்த்தம் நம்புநாயகி அம்மன் கோவில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளிட்ட உப கோவில்  உண்டியல்கள், காசோலை, யானை பராமரிப்பு நிதி, மற்றும் திருக்கோவில் உண்டியல்கள் திறக்கும் பணி நடைபெற்றது 

உண்டியல் என்னும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள், வங்கிப் பணியாளர்கள் என ஏராளமானோர் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணி அளவில் உண்டியல் என்னும் பணி தொடங்கி மாலை 5 மணி அளவில் நிறைவு பெற்றது. மொத்தமாக உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 35 லட்சத்தி 11 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்க பணமும் தங்கம் 77 கிராமும் , வெள்ளி 4 கிலோ 105 கிராம், மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் வரப்பட்டுள்ளதாக அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Video Top Stories