ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி; 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் 600க்கம் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்.

Share this Video

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு கம்பு விளையாட்டுச் சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிலம்ப போட்டி ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. உலக சிலம்பம் விளையாட்டு சங்க துணைத் தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 

இதில் சிறப்பு அழைப்பாளராக வாசன் மெட்ரிக் பள்ளி நிர்வாக தலைவர் வாசன் உமா, மருத்துவர் ராதா அர்ஜுன், பாஜக போகலூர் ஒன்றிய பொதுச் செயலாளர் முத்துவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போட்டியை துவங்கி வைத்தனர். இதில் முதல் இடத்தை மதுரை காட்டு ராஜா சிலம்ப குழுவினரும், இரண்டாம் இடத்தை K.K ஸ்போர்ட்ஸ் அகடாமியும், மூன்றாம் இடத்தை சத்திரக்குடி சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்களும் பிடித்து பரிசு கோப்பைகளையும், பாராட்டு சான்றுகளையும் பெற்றுச் சென்றனர்.

Related Video