Asianet News TamilAsianet News Tamil

போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச புத்தகம் வழங்கிய இளைஞர் மன்றத்தினர்

மஞ்சூர் சமத்துவ இளைஞர் மன்றம் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

First Published Feb 12, 2024, 12:17 PM IST | Last Updated Feb 12, 2024, 12:17 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தில் உள்ள சமத்துவ இளைஞர் மன்றம் சார்பில் குரூப் 4 போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சொந்த செலவில்  கல்வி பயில்வதற்கு கல்வி கட்டணங்கள், பயிற்சி புத்தகங்கள்  வழங்கி வருவது மட்டுமின்றி தங்களது கிராம மாணவர்களை வீட்டுக்கு ஒருவரையாவது அரசு பணியாளராக மாற்றுவதே தங்களின் கனவாக கருதி செயல்பட்டு வருகின்றனர். 

முன்னதாக சமத்துவ இளைஞர் மன்றம் பொதுக்குழு நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன்  ஆகியோர் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை இலவசமாக வழங்கினர். இதில் மஞ்சூர் சமத்துவ இளைஞர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Video Top Stories