சித்திரை மாத அமாவாசை! முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.!

கோவிலில் உள்ள மகாலட்சுமி கங்கா காவேரி சேது மாத தீர்த்தம் உட்பட 22 புண்ணிய தீர்த்தமான தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Share this Video

சித்திரை மாத அமாவாசை முன்னிட்டு இன்று முன்னோர்களுக்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் திதி தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

சித்திரை மாத அமாவாசை முன்னிட்டு இன்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அக்னி தீர்த்த கரையில் தீர்த்தமாடி மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு பூஜைக்காக அழைத்து வந்த பசுவிற்கு பழங்கள் கீரை வகைகள் கொடுத்து வழிபட்டனர்.

 கோவிலில் உள்ள மகாலட்சுமி கங்கா காவேரி சேது மாத தீர்த்தம் உட்பட 22 புண்ணிய தீர்த்தமான தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இன்று பக்தர்கள் ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு அதிக அளவில் வந்ததால் வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து காவல்துறையினர் மாற்று வழியில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Video