ராமநாதபுரம் அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்த்து மெய் சிலிர்த்த மக்கள்

ராமநாதபுரத்தில் அரசினர் நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழாவின் போது நடனம், தற்காப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் காண்போரை அசரச் செய்தனர்.

Share this Video

ராமநாதபுரம் மாவட்டம், பாண்டியூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று பள்ளியின் 6வது ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் வாசுகி தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் சிலம்பம், பேச்சுப்போட்டி, கும்மியாட்டம் போன்ற பல்வேறு பாரம்பரிய நடனம் மற்றும் தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து அசத்தினர்.

மேலும் திரைப்பட பாடலுக்கு நடனமாடி அசத்தினர். முன்னதாக சைல்ட் லைன் குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க நாடகமும் நடைபெற்றது. மாணவர்களின் இந்த திறமையைக் கண்ட ஆசிரியர் மற்றும் பெற்றோர்களை மெய்சிலிர்க்க வைத்தது மட்டுமின்றி மாணவர்களின் நடனம் காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் தலைமை ஆசிரியர் உமாதேவி ஆசிரியர் பயிற்றுனர் நாகராஜன், ஆசிரியர் ஜான் கென்னடி, பெற்றோர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Video