ராமநாதபுரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பில் மோதி இருவர் படுகாயம்

பரமக்குடி அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்.

Share this Video

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரையை நோக்கிச் சென்ற கார் பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி சாலையின் நடுவே உள்ள மைல் கல்லில் மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் காரில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சாலையின் நடுவே கார் பயங்கரமாக மோதும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video