Asianet News TamilAsianet News Tamil

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா; கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்

மணமேல்குடியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 ஆண்டு சதய விழாவை  முன்னிட்டு நடைத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தில் மாடுகள் சீறிப் பாய்ந்தன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது, இந்த போட்டியை  தமிழர் தேசம் கட்சி நிறுவன தலைவர் KK செல்வக்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த போட்டி பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளாக  நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மாட்டு வண்டி ஜோடிகள் நான்கு கால் பாய்ச்சலில் போட்டி போட்டுக் கொண்டு துள்ளிக்குதித்து ஒன்றையொன்று‌ முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள்   சாலை நெடுகிலும் நின்று சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி  ஜோடிகளையும், அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத்துடன்  கண்டு ரசித்தனர். மேலும் இந்த பந்தயத்தில்  முதல் மூன்று  இடங்களை பிடித்த மாட்டு வண்டி  உரிமையாளர்களுக்கு   ரூபாய் 2 லட்சத்து 52 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Video Top Stories