புயல் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் விரைவில் மீள வேண்டும்; புதுக்கோட்டையில் விளக்கு பூஜை செய்து பிரார்த்தனை

மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளான சென்னை மக்கள் விரைவில் நலம் பெற வேண்டி புதுக்கோட்டையில் 301 பெண்கள் விளக்கு பூஜை நடத்தி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Share this Video

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஐயப்பன் கோவிலில் 19வது ஆண்டு ஐயப்ப பக்தர்களின் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. தினம் தினம் நடைபெறும் இந்த பூஜையில் நேற்றைய தினம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள் விரைவில் மீண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு சிறப்பு விளக்கு பூஜை மேற்கொள்ளப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த பூஜையில் 301 பெண்கள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

Related Video