அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாடம் நடத்திய கரூர் எம்.பி. ஜோதிமணி

கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவிகளுக்கு தொகுதி உறுப்பினர் ஜோதிமணி பாடம் நடத்தினார்.

Share this Video

கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அத்தொகுதி உறுப்பினர் ஜோதிமணி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். மேலும் எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம் என்று அவரது கைபேசி எண்ணை மாணவிகள், ஆசிரியர்களுக்கு வழங்கி சென்றார்.

Related Video