Video : எடப்பாடி ஆதரவாளர் வீட்டில் வருமான வரி சோதனை! - புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை, பெரியார் நகரில் உள்ள இரண்டு வீடுகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் பாண்டித்துரை என்பவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
 

Share this Video

பாண்டித்துரை நெடுஞ்சாலைத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அதன் பின் வேலையைவிட்டு விட்டு அரசு ஒப்பந்ததாரராக பதிவு செய்து சிறு சிறு வேலைகள் பார்த்துக் கொண்டு வந்தார். அதன் பின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் நெருக்கம் ஏற்பட்டு அவர் மூலமாக எடப்பாடி பழனிச்சாமி இடம் பழக்கம் ஏற்பட்டு பின்பு தமிழ்நாடு முழுவதும் டெண்டர் மூலம் வேலைகளை எடுத்து இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ள பாண்டித்துரை வீட்டில் தற்பொழுது வருமானவரித் துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர்

Related Video