ஜல்லிக்கட்டு போட்டியின் போது மின்கசிவு ஏற்பட்டு விபத்து; 14 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில், கலக்ஷன் பாயிண்ட் பகுதியில் உயர் மின்னழுத்த மின்கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு 14 பேர் காயமடைந்தனர்.

Share this Video

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே உள்ள திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்ற இடத்தின் மாடுகளை உரிமையாளர்கள் கயிறு போட்டு பிடிக்கும் இடமான கலக்சன் பாயிண்ட் பகுதியில் உயர் மின்னழுத்த மின் கம்பியில் இருந்து எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் இருந்த பார்வையாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என 14 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனது.

Related Video