ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள்; புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

தமிழ்நாட்டின் 2024-ம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசலை அமைக்கும் பணியினை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

Share this Video

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் வருகிற ஆறாம் தேதி நடைபெற இருக்கும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த பணியினை முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு வரும் பேரிகாட், மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், காளைகள் கலெக்சன் பாயிண்ட் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.

Related Video