நீலகிரியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்; லாரியில் மோதி உயிரிழந்த வாலிபர் - வீடியோ வெளியாகி பரபரப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் லாரியில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனரான மகேந்திரன் என்பவரது மகன் மனோஜ் (வயது 29). டாக்ஸி ஓட்டுநர். நேற்று இரவு 8:30 அளவில் கரும்பாலம் பகுதியில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் காட்டேரி 14வது கொண்டை ஊசி வளைவில் லாரியில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளது. அதில் கரும்பாலம் பகுதியில் இருந்து மனோஜ் காட்டேரி பகுதிக்கு வரும் பொழுது தனக்கு முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்வதும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் மோதுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் அறிந்த குன்னூர் காவல்துறையினர் மனோஜின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தற்போது உடல்கூறு ஆய்வு முடிந்து மனோஜின் குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Related Video