முறைகேட்டில் சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. சாட்டையை சுழற்றிய மாவட்ட ஆட்சியர் - அதிரடி உத்தரவு

குன்னூர் திமுகவை சேர்ந்த எடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், செக்கில் கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Share this Video

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொத்தம் 6 ஊராட்சிகள் உள்ளன. குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த முருகன் உள்ளார். இவர் மீது சமீபத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது. இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

அதன்படி கடந்த 3 மாதமாக நடத்தப்பட்ட விசாரணையில் தனது உறவினர்கள் ஊராட்சியில் பணியாற்றியதாக நடைபெறாத பணிக்கு உறவினர்கள் பெயரில் பணம் வழங்கியுள்ளதாகவும், ஆவணங்களை சரியாக பராமரிக்கவில்லை உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரனையில் தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் திமுகவை சேர்ந்த எடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் செக்கில் கையொப்பமிடும் அதிகாரத்தை பறிக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளார். மேலும் செக்கில் கையொப்பமிடும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவால் பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

Related Video