நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: எதிர் திசையில் வந்த நபரை தூக்கி எரிந்துவிட்டு பல்டி அடித்த கார்

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்.

Share this Video

நாமக்கல் அருகே கீரம்பூர் சுங்கச்சாவடி பகுதியில் கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனத்தில் வேகமாக மோதிவிட்டு கார் சாலையோரம் உருண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video