எங்கள் சாதி பெண்கள் மீது கை வைத்தால் கருவறுப்போம்; இணையத்தில் வைரலாகும் கொமதே கட்சி வேட்பாளரின் ஆணவ பேச்சு

எங்கள் சாதி பெண்கள் மீது மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆசைப்பட்டால் அவர்களை குழந்தையோடு சேர்த்து கருவறுப்போம் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Mar 19, 2024, 11:28 AM IST | Last Updated Mar 19, 2024, 11:39 AM IST

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதியில் அக்கட்சி சார்பில் சூர்யமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வேட்பாளர் சூர்யமூர்த்தில் விழா ஒன்றில் பங்கேற்று எங்கள் சாதி பெண்களை காதலித்து திருமணம் செய்ய நினைக்கும் மாற்று சாதி இளைஞர்களை கருவறுப்போம் என்று வெளிப்படையாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் ஆணவப் படுகொலை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் என பல்வேறு சம்பவங்களை அவரே ஒப்புக் கொண்ட பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.

Video Top Stories