Watch

கொல்லிமலையில் உணவு தேடி ஊருக்குள் வந்த கரடியால் மலைவாழ் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Share this Video

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது, கொல்லிமலையில் குரங்கு, தேவாங்கு, காட்டு பன்றிகள் அதிக அளவில் உள்ளன. கொல்லிமலையில் மக்கள் வாழும் பகுதிகளில் கடந்த சிலமாதங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

கொல்லிமலை சேலூர் நாட்டில் உள்ள சேலூர் கஸ்பா பகுதியில் ஒரு கரடி அங்கு உணவு தேடி வந்துள்ளது. அதனை பார்த்த அந்த பகுதி மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு அந்த கரடியால் அங்கு உள்ள மலைவாழ் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பு ஏற்படுத்தாமல் சென்று விட்டது. அங்கு வந்த கரடியை விவசாயிகள் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர்.

Related Video