12 ஆண்டுகால பணி; தூய்மை பணியாளரை காலால் எட்டி உதைத்து வீட்டுக்கு அனுப்பிய மருத்துவர்

நாமகல்லில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மை பணியாளரை மூத்த மருத்துவர் காலால் உதைத்தும், அடித்தும் வெளியே அனுப்பும் வீயோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Oct 11, 2023, 5:03 PM IST | Last Updated Oct 11, 2023, 5:03 PM IST

நாமக்கல் கோட்டை சாலையில் குமரன் பாலி கிளினிக் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ராஜ்குமார் என்பவர் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் தூய்மைப் பணியாளரை  அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

இத்தொடர்பாக மருத்துவர் ராஜ்குமாரிடம் கேட்ட போது பெண் தூய்மைப்பணியாளர் 12 ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்த வந்தார். கடந்த 9ம் தேதி திங்கள் கிழமை மருத்துவமனையை தூய்மை செய்யவில்லை என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது தொடர்பாக தூய்மைப் பணியாளரிடம்  கேட்டதாகவும், தூய்மைப் பணியாளரை அடிக்க வில்லை எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் தூய்மை பணியாளரை வேலைக்கு வர வேண்டாம் என மருத்துவர் ராஜ்குமார் தெரிவித்ததால் அந்த பெண் பணியாளர் மருத்துவமனைக்கு வேலைக்கு வரவில்லை. இந்த நிலையில் பெண் தூய்மைப் பணியாளரை மருத்துவர் ராஜ்குமார் அடித்து, காலால் எட்டி உதைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி நாமக்கல்லில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories