அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்த பாம்புகள்; அசால்டாக கையில் எடுத்து சென்று வழி அனுப்பிய இளைஞர்கள்

ராசிபுரம் அருகே கொடிய விஷம் கொண்ட பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற இளைஞர்களால் பரபரப்பு.

Share this Video

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த மணி(வயது 50) என்பவரது வீட்டிற்குள் பாம்பு இருப்பதாக தனது பாம்பு பிடி நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி விரைந்து வந்த 3 இளைஞர்கள் வீட்டிற்குள் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மறைந்திருந்த 8 அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை மற்றும் 6 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை பிடித்தனர். 

பிடிபட்ட பாம்பை இளைஞர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, பாம்பை அசால்டாக கையில் எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றனர். பிடிபட்ட பாம்பை அருகாமையில் உள்ள வனப்பகுதியில் விடுவிப்பதாக தெரிவித்து இளைஞர்கள் சாலையில் எவ்வித பயமின்றி பாம்பை எடுத்துச் சென்ற சம்பவம் காண்போரை அச்சத்தில் ஆழ்த்தியது.

Related Video