மயிலாடுதுறையில் புத்தர் சிலையுடன் கரை ஒதுங்கிய தெப்பம்; அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை அருகே ஆளில்லாமல் சிறிய அளவிலான புத்தர் சிலையுடன் கரை ஒதுங்கிய தெப்பம் குறித்து கடலோர காவல்படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Video

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தெப்பம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனை கண்ட மீனவர்கள் அருகில் சென்று பார்த்தபோது மரத்தினால் செய்யப்பட்ட தெப்பம் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் அதில் சிறிய புத்தர் சிலை ஒன்றும் இருந்தது. 

மிதந்து வந்த தெப்பத்தை கயிற்றால் கட்டி கரைக்கு இழுத்து வந்து உப்பனாற்றில் கட்டி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்த தெப்பத்தை பார்வையிட்டு காவல் துறையினர் ஆய்வு செய்தனர். 

வெளிநாடுகளில் தெப்பம் செய்து கடலில் விழா கொண்டாடும்போது திசை மாறி இப்பகுதிக்கு வந்ததா இந்த தெப்பம் எந்த நாட்டை சேர்ந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video