குத்தாலம் அருகே செல்வ கணபதி கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செல்வ கணபதி விநாயகர் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Share this Video

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கீழவெளி சாலை ஸ்ரீராம் நகரில் செல்வ கணபதி விநாயகர் திருக்கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை முதற் கால பூஜை தொடங்கப்பட்டு விக்னேஸ்வரா பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது நேற்று இரண்டாம் கால பூஜை தொடங்கப்பட்டு பூர்ணாஹுதி புனித நீர் நிரப்பப்பட்ட கடம் புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி பின்னர் கோபுரத்தை வந்தடைந்தனர். ஓதுவா மூர்த்திகள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபாடு செய்தனர்

Related Video