தேசிய தலைவர் தேவர் திருமகனாருக்கு எங்கள் மாநில மக்கள் சார்பாக மரியாதை செலுத்துகிறேன் - கோவா முதல்வர் பெருமிதம்

குருபூஜை விழாவை முன்னிட்டு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Share this Video

மதுரை கோரிப்பாளையம் பசும்பொன் தேவர் திருமகனார் சிலைக்கு அவரது 116 வது ஜெயந்தி மற்றும் 61 வது குரு பூஜையை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உடனிருந்தார். அப்போது பிரமோத் சாவந்த் கூறுகையில், இந்திய சுதந்தர வரலாற்றில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலரின் பங்கு மகத்தானது.

தேசியத் தலைவர் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு அவரது ஜெயந்தி விழாவில் கோவா மக்களின் சார்பில் அஞ்சலி செலுத்துவதில் பெருமை அடைகிறேன் குறிப்பிட்டார்.

Related Video