சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை 3 நாய்கள் சேர்ந்து கடித்து காயப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Aug 30, 2023, 9:49 AM IST | Last Updated Aug 30, 2023, 9:49 AM IST

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 38வது வார்டு வாசவி நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் சிறுமியை துரத்தி கடிக்க ஆரம்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மேலும் அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரு தெரு நாய்களும் சிறுமியை சூழ்ந்து கடிக்க, சிறுமி நிலைகுலைந்து கீழே விழுந்ததும் மூன்று நாய்களும் சிறுமியை சூழ்ந்து கடித்துள்ளது. 

அப்பகுதியில் இருந்த சிலர் ஓடி வந்து நாய்களிடமிருந்து சிறுமியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நாய்கள் துரத்தி கடித்ததில் கீழே விழுந்து சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில், சிறுமியின் தலைப் பகுதியில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிறுமி சிகிச்சைக்கு பின்னர் சீரான உடல்நிலையுடன் வீடு திரும்பிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Video Top Stories