ஊருக்கு நல்லது செய்ய நினைச்சு தன் உயிரை பலி கொடுத்த முதியவர்..! கதறி அழும் உறவினர்கள் வீடியோ..

ஊருக்கு நல்லது செய்ய நினைச்சு தன் உயிரை பலி கொடுத்த முதியவர்..! கதறி அழும் உறவினர்கள் வீடியோ..

Share this Video

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் இன்று காலை இயற்கை உபாதைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டம் அருகே சென்றுள்ளார்.

நள்ளிரவு சிங்காரப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கனமழை பெய்த நிலையில் அந்த பகுதியில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை பார்த்த ரவி சமூக அக்கறையுடன் அந்த கம்பியை எடுத்து சாலையின் ஓரத்தில் வைப்பதற்காக எடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கம்பியில் இருந்த மின்சாரம் ரவி மீது பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Video