Asianet News TamilAsianet News Tamil

கிருஷ்ணகிரியில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த எம்.பி. செல்லகுமார்

எலத்தகிரி புனிதா அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

First Published Nov 21, 2023, 5:38 PM IST | Last Updated Nov 21, 2023, 5:38 PM IST

கிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரி புனித  அந்தேணியர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகளின் வசதிக்காக கூடுதல் கட்டிடம் வேண்டும் என கிருஷ்ணகிரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது.

கட்டிமுடிக்கப்பட்ட கூடுதல் பள்ளிக்கூடத்தின் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பங்குதந்தை மார்டின் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு. அழைப்பாளராக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக் குமார் கலந்துக்கொண்டு  பள்ளி, மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்து பல்வேறுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாரட்டி பேசினார். 

Video Top Stories