வெயிலுக்கு இதமாக குடும்பத்தோடு ஏரியில் கும்மாளம் போடும் காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு தேடி ஊருக்குள் வந்த 6 காட்டு யானைகள் ஏரில் இறங்கி ஆனந்த குளியலிடும் நிலையில், அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

First Published Sep 12, 2023, 10:29 AM IST | Last Updated Sep 12, 2023, 10:29 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள யானைகள் தினமும் கிராம பகுதிகளில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், கேரட் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் நொகனூர் வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி வந்த 6 யானைகள் இன்று காலை மதகொண்டப்பள்ளி கௌரம்மா ஏரியில் முகாமிட்டு குளித்து கும்மாளமிட்டு அங்கும், இங்கும் உலா வருகின்றன. யானைகள் கூட்டத்தை பார்க்க கிராம மக்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் ஜவளகிரி வனத்துறையினர், தளி காவல் துறையினர் பொது மக்களை கட்டுபடுத்தி யானைகளை பாதுகாப்பாக மாலை ஏரியில் பாதுகாத்து ஆட்கள் நடமாட்டம் குறைந்த பின் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.