'இப்படி இருந்தால் நாங்கள் எப்படி போவது' மறியல் போராட்டத்தில் நடுவே பள்ளி மாணவன் பேச்சு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கும்பரம் சாலையில் கட்டிகணபள்ளி கிராமத்தில் சாலை மறியல் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பருத்தி பள்ளி,மயிலே பள்ளி, தின்னூர் மைலே பள்ளி, தின்னுர் பெரிய பாப்பன பள்ளி கிராமங்களிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது சாலைமறியல் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் தொடர்ந்து குடிநீர் வசதி ஏற்பாடு செய்ததால் பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதறகாக தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கின்றனர் தகவல் அறிந்த சூளகிரி விரைந்து வந்த காவல் துறையினர் பேச்சு வரத்தை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது